“பூமியே 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் பிறந்தது”…. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 65 வருடங்களில் செய்யப்படாத வளர்ச்சி பணிகளை ஆம் ஆத்மி கட்சி 8 வருடங்களில் செய்து முடித்துள்ளது.

டெல்லியில் சர்வதேச நகரங்களின் தரத்துக்கு ஈடாக போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாஜகவினர் தங்களால் தான் மெட்ரோ ரயில்  உள்ளிட்ட பணிகள் முடிவடைந்ததாக கூறுகிறார்கள். சொல்லப்போனால் பூமியே 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பிறந்தது என்று கூறினாலும் கூறுவார்கள் என்று நக்கலாக கூறினார்.