10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர்… 28,00,000 குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல்!

சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் காலகட்டத்தில் மட்டும் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழலில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த போர் நடந்த சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் போர், வன்முறை, மரணம் மற்றும் இடப்பெயர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் மனதளவில் குழந்தைகள் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.