“ஆந்திர மாநில முதல்வர் துரைமுருகன் சந்திப்பு” உறுதியாகிறதா 3_ஆவது அணி…!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது.

மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடையும் சூழலில் பல்வேறு முக்கிய திருப்பமாக அரசியல் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அதில் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்து. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று திமுக சார்பில் அறிக்கை வாயிலாகவும் , சந்திரசேகராவ் 3_ஆவது அணி  அமைக்க வில்லை என்று முக.ஸ்டாலின் பேட்டி வாயிலாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது பேசினார். சுமார் 20  நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் கலந்து கொண்டார். இது குறித்து துரைமுருகன் கூறும் போது , இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் என்று கூறினார். சந்திரசேகரராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக 3_ஆவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.