ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4000 வாத்து குஞ்சுகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பகுதியில் முனுசாமி -ருக்கு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் வாத்து குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தனர். எனவே அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கூடாரம் அமைத்து வாத்து குஞ்சுகளை வளர்த்து வந்தனர். இதனையடுத்து 6 மாதங்கள் வளர்ந்த குஞ்சுகளை விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் 2 1/2 மாதங்களே ஆன 4000 வாத்துக் குஞ்சுகளை ஏரிக்கரையில் உள்ள கூடாரத்தில் வளர்த்து வந்தனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரியில் நீர் வரத்து அதிகமாகி முழுவதும் நிரம்பியது.
இதில் கூடாரத்தில் வெள்ளம் பாய்ந்ததில் 4000 வாத்து குஞ்சுகளும் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டன. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் கால்நடை மருத்துவர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாத்து குஞ்சுகளுக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.