“குடிபோதை”போக்குவரத்து காவலரிடம் தகாத செயலில் ஈடுபட்ட பெண்… சமூக வலைதளத்த்தில் வைரலாகும் வீடியோ..!!

டெல்லியில் குடிபோதையில் போக்குவரத்து காவலரிடம் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 

டெல்லியில் ஒரு ஆணும்,பெண்ணும் நன்றாக குடித்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மறித்து வாகன சாவியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளார்.

Image result for குடிபோதையில் காவலருடன் பெண் தகராறு

இதையடுத்து  வண்டியில் அமர்ந்திருந்த நபரும் தகாத வார்த்தைகளால் போக்குவரத்து காவலரை வசை பாடியுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து காவலர் அளித்த புகாரில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிவந்த அணில்பாண்டே என்பவரையும், அவருடன் வந்த அநாகரிகமாக நடந்து கொண்ட மாதுரி என்ற பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர். போதையில் அந்த  போக்குவரத்து காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *