தடையை மீறி கஞ்சா கடத்த முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் தடையை மீறி கஞ்சா கடத்தப்படுவதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் வசித்துவரும் கணேசன் மற்றும் சிவா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடையை மீறி கஞ்சா கடத்த முயன்ற குற்றத்திற்காக 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.