அந்த பேக்ல என்ன இருக்கு….? சோதனையில் சிக்கிய பொருள்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!!

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் வெறும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயிலில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். எனவே காவல்துறையினர் அவர் கையில் வைத்திருந்த பெரிய பையை சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் மாஜி என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த  காவல்துறையினர் நிரஞ்சன் மாஜியை கைது செய்ததோடு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *