வாழ்த்து அட்டையில் இருந்த பொருள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

56 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தபால் சரக்கக பிரிவிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி தபால் சரக்கக பிரிவிற்கு வந்த பார்சல்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஆரோவில் பகுதியிலுள்ள ஒரு முகவரிக்கு வாழ்த்து அட்டை இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 249 ஸ்டாம்ப் போதை மாத்திரைகளும், 994 பிங்க் நிற போதை மாத்திரைகளும் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த மாத்திரைகளின் மதிப்பு சுமார் 56 லட்சம் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரியிலுள்ள அந்த முகவரிக்கு சென்று அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர் நெல்லையை சேர்ந்த ரூபக் மணிகண்டன் மற்றும் லாய் வைகஸ் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்களது வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா, போதை மாத்திரைகள், ஸ்டாம்ப் மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது புதுச்சேரிக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும்  ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *