லாரியில் தனியறை… கையும் களவுமாக சிக்கி கொண்ட நபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தி வந்த வாலிபரையும், அதனை வாங்குவதற்காக காத்திருந்தவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வேகமாக வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்ததில் ரகசிய அறை ஒன்றில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்தவரிம் நடத்திய விசாரணையில் அவர் துபாஷ்சங்கர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துபாஷ்சங்கரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 328 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது இந்த கஞ்சாவை வாங்குவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காத்திருந்த ஸ்ரீநாத் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *