பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருப்பதியிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த 2 பேரின் பைகளை வாங்கி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் 5 பாக்கெட்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா, குமார் ஆகிய ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் விசாகப்பட்டினத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.