எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா…? மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை… கைது செய்த காவல்துறையினர்…!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த  குற்றத்திற்காக 58 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் சென்றுள்ளன. அதன்படி மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மாவட்டத்திலுள்ள 7 உட்கோட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸ் கடைகளில் சோதனை செய்துள்ளனர்.

அதில் அப்பகுதியில் வசித்து வரும் 4 பேரை தடையை மீறி புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து அவர்களின் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் ஆவடி கூட்ரோட்டில் ஹரிதாஸ் மற்றும் மாயவன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பெட்டிக்கடைகள், வீடுகள் மற்றும் மளிகை கடை போன்ற இடங்களில் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த  குற்றத்திற்காக மொத்தம் 58 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *