ஏன் இப்படி பண்ணுறீங்க…? வசமாக சிக்கி கொண்ட வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி கஞ்சா விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது அப்பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவது உறுதியானது.

இதனை தொடர்ந்து அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் பாதிரிக் குப்பம் பகுதியில் வசித்து வரும் சூர்யா, பரங்கிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் பாண்டியன், நாகராஜ், ஜெகநாதன், சிவா, ராஜதுரை, அஞ்சலாட்சி, ஆனந்தராஜ் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 8 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த கஞ்சா  பொட்டலங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *