தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த பெரிய பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 1/2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருமழிசை உடையார் கோவில் தெருவில் வசித்துவரும் ஸ்டீபன்ராஜ் மற்றும் சிலம்பரசன் ஆகிய 2 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 1 1/2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் 20 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *