எத்தனை தடவை சொல்லுறது…? கையும் களவுமாக சிக்கி கொண்ட நபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மது பாட்டில்கள் கடத்திவந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ராஜாங்கம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜாங்கத்தை கைது செய்ததோடு அவரிடமிருந்த 60 மது பாட்டில்களையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *