இவரைப் பார்த்தால் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!!

பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருப்பதியிலிருந்து பேருந்து  வந்தது. அந்த பேருந்திலிருந்து இறங்கிய  பயணி ஒருவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர் கையில் வைத்திருந்த பையில் 1 1/2 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பதியிலிருந்து கஞ்சாவை சென்னையில் விற்பனை செய்ய கடத்தி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் என்பதும் காவல்துறையினருக்கு விசாரணையின் போது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *