சார் அந்த “பேக்கை” திறங்க…. போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வேலூர் ரயில் நிலையத்தில் ஷாக்….!!

ரயிலில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததை குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பகுதிக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து ரயிலில் கஞ்சா, வெள்ளி பொருட்கள் மற்றும் ரேசன் அரிசி போன்றவை கடத்தப்படுவதை தடுக்க குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விசாகப்பட்டினத்திலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப்படை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையில் பயணிகளின் இருக்கைகளின் கீழே 2 பைகளில் கஞ்சா பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்ததை குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தவர்கள் பற்றி விவரம் தெரியவில்லை. அதிலிருந்த 18 கிலோ கஞ்சாவை தனிப்படை காவல்துறையினர் கைப்பற்றி காட்பாடி ரயில்வே பாதுகாப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட  18 கிலோ கஞ்சா பொட்டலங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *