கொடிய கொரோனாக்கு மருந்து ரெடி …! மாஸ் காட்டும் தாய்லாந்து

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த நாட்டில் 19 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சை பெற்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறிவந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை தாய்லாந்து கண்டுபிடித்து விட்டதாக  தெரிவித்துள்ளது. அந்நாட்டின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்நாட்டின் டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையில் மருத்துவர்கள் அடங்கிய குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. முதலில் இந்த மருத்துவ குழு எச்.ஐ.வி. தடுப்பு மருந்தில் சில மாற்றங்கள் செய்து நோயாளிகளுக்கு கொடுத்ததில் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து கடும் முயற்சியில் ஈடுபட்ட மருத்தவ குழு கடுமையான காய்ச்சலுக்கு வழக்கமாக கொடுக்கும் தடுப்பு மருந்துடன் எச்.ஐ.வி. கிருமி தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தையும் கலந்து கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தாக மாற்றி அசத்தியுள்ளார். இதனால் உலக அளவில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த ஆய்வாளர்கள் , டாக்டர்களை நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *