ரூ20,00,000 போதைப்பொருள் பறிமுதல்… தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை அருகே பெருங்களத்தூரில் 2 மினி வேன்களில் கடத்தப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 1338 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

Image result for குட்கா

இது தொடர்பாக பெருங்குளத்தூரை  சேர்ந்த பிரகாஷ், முகமது ஆசாத் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இரண்டு மினி வேன்களையும் காவல்துறைனர் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பீர்க்கன்கரணை முனியசாமி என்பவர் ரகசியமாக குடோன் வைத்து கடைகளுக்கு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முனுசாமியை   காவல்துறையினர் தேடி வருகின்றனர்.