“போதைப்பொருள் வழக்கு”…. ஷாருக்கான் டூப்புகளுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!

போதைப்பொருள் வழக்கால் ஷாருக்கான் டூப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

டூப்ளிகேட் ஷாருக்கான்களுக்கு வந்த புது சிக்கல் Entertainment பொழுதுபோக்குஇதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஷாருக்கான் மகனுக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாருக்கானின் ரசிகர்கள் சிலர் தன் மகனை சரியாக வளர்க்கவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் போல் இருக்கும் ராஜு என்பவருக்கும் ஹைதர் மக்பூல் என்பவருக்கும் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதன்படி, இவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஷாருக்கான் போல நடித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தனர். இந்த நிலையில் ஆர்யன் விவகாரத்தில் ஷாருக்கான் தற்பொழுது நெகட்டிவ் கருத்துக்களை சந்தித்து வருவதால் இவர்கள் இருவரையும் தங்களது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என அந்த நிகழ்ச்சியின் உரிமையாளர்கள் கூறிவிட்டார்களாம். தற்போது இவர்கள் இருவரும் புலம்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *