சுமை தூக்கும் தொழிலார்களின் செயல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்… திருப்பூரில் பரபரப்பு…!!

4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற குற்றத்திற்காக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் துறையினருக்கு காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாஸ்கோ நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் 4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 3 பேரும் அதே பகுதியில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களான யாசர் அராபத், நரசிம்ம பிரவீன், சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கு காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *