திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அமச்சி கோவிலில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு டிரைவரான அருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அருணும், அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். இந்நிலையில் தெற்கு வள்ளியூர் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது கேட் மூடி இருந்ததை கவனிக்காமல் அருண் ரயில்வே கேட் மீது மோட்டார் சைக்கிளில் மோதினார்.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.