“சவாரிக்கு சென்ற ஓட்டுநர்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. புதுச்சேரியில் நடந்த சோகம்….!!!

ராட்சத அலையில் சிக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் கார் ஓட்டுநரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது காரில் புதுச்சேரிக்கு சவாரி ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். பின்னர் பயணிகளை தங்கும் விடுதியில் இறக்கி விட்டு கடற்கரைக்கு சென்று குளித்துள்ளார். இந்நிலையில் ராட்சத அலையில் சிக்கி மணிகண்டன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மணிகண்டனை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.

எனவே காவல்துறையினருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *