குடும்பத்தகராறு…. ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

குடும்பத்தகராறு காரணமாக ஓட்டுநர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் ஓட்டுனர் சத்தியமூர்த்தி – பிரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்தியமூர்த்தி மது குடித்து விட்டு வந்ததால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சத்தியமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *