நாட்டுக்காக ஓட்டு போடுங்க…. உங்களுக்காக மாஸ்க் போடுங்க…. பிக்பாஸ் புகழ் ஆரியின் விழிப்புணர்வு வீடியோ…!!

பிக்பாஸ் புகழ் ஆரி தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிபெற்றவர் நடிகர் ஆரி. இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஆரி தற்போது தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.

நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க என்ற வசனத்தோடு இருக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CNFBVrWBkVs/