
தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட்டை என்ற பகுதியில் பிராந்தி குமார் பணிக்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ட்ரில் மேன் என்ற பெயரும் உள்ளது. இவர் மூக்கில் ஓட்டை போடுவது, மின்விசிறியை நிறுத்த விரலை பயன்படுத்துவது போன்ற விசித்திரமான ஸ்டண்டுகளை செய்து பெயர் பெற்றவர். இவர் பல ரியலிட்டி ஷோக்களில் பங்கேற்று 4 முறை கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் வேகமாக ஓடும் மின் விசிறியை நாக்கைக்கொண்டு நிறுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக ஓடும் மின்விசிறியை நாக்கை கொண்ட நிறுத்துகிறார். இதிலும் அவர் சாதனை படைத்து கின்னஸ் ரெக்கார்ட் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த சாதனை தனிப்பட்ட மைக்கல் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக நான் செய்த கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றாகும் என்று கூறினார். இந்த வீடியோ கிட்டத்தட்ட 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram