டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம் – சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெறு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 18ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதனிடையே டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிக்காக 67.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.22.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்டா பகுதிகளில் 165 தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதெற்கென தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைத்துள்ளது. அதன்படி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையே சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.