அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்ம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ யார்க் என்ற பத்திரிக்கையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல் சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் 24 ஆண்டுகளுக்கு முன்பு தான் மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற ஆடை நிறுவனத்தில் அதிபர் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டார். அதிர்ந்து போன நான் அவரை தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடி தப்பி விட்டேன் என்று இ ஜீன் கரோல் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றசாட்டை அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் மறுத்துள்ளார். இது டிரம்ப் கூறியதில், இ ஜீன் கரோல் என்ற பெண்ணை என்னுடைய வாழ்நாளில் ஒரு முறை பார்த்தது கிடையாது. கரோல் எழுதுகின்ற புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பொய்யான குற்றசாட்டை கூறுகின்றார். அவர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஏதேனும் போட்டோ , ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா என்று டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் நடைபெறும் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.