“பிறப்பு முதல் இறப்பு வரை” டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழுவாழ்க்கை வரலாறு…!!

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை முழு வாழ்க்கை வரலாற்றையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

வி.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராக தன் பணியை தொடங்கி எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவரதுமுழுவாழ்க்கை வரலாற்றையும் அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பும் படிப்பும்:

1888 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டது. பின் தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும் திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால் அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியை திருவள்ளூரில் உள்ள பள்ளியிலும், பின்னர் திருப்பதியில் உள்ள லுத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும் படித்தார். அவர் வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின் சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர் அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றார். 

Related image

இல்லற வாழ்க்கை:

ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது தூரத்து உறவினரான சிவகாமு என்பவரை தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால் இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தை கடந்து இருந்தது. 

Image result for rathakrishnan family photo

ஆசிரியராக அவருடைய பணி:

முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள் 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணி ஏற்றார்.  1931 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939ஆம் ஆண்டு பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1946ல் அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்கு பின் 1948இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக் கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது. 

Image result for rathakrishnan family photo

அரசியல் வாழ்க்கை:

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கபட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவாக அமைந்தது. 1952ல் இந்தியாவின் முதல் துணை தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாக பணியாற்றிய பிறகு 1962ல் இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Image result for rathakrishnan family photo

அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்து பதவிக் காலத்தின்போது இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. 1967 ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் குடியேறினார். பல்வேறு சாதனைகள் படித்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது 86வது வயதில் ஏப்ரல் 17 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.