ரூ4,00,000க்கு ஆசைபட்டு டபுள் கேம் ஆடிய கடத்தல்காரர்கள்…. போலீசில் சிக்கி பரிதாபம்..!!

கன்னியாகுமரியில் கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தகுமாரின் மாமன் மகளான ஜெர்சியை வெட்டிக்கொன்ற சாஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமார் என்பவரை கொல்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி விட்டுள்ளார்.

Image result for arrest

ஆனால் சாந்தகுமாரை கொலை செய்யாமல் பணம் பறிக்க நினைத்த ரௌடிகள் காவல்துறையில் சிக்கிக் கொண்டனர். சிறையிலுள்ள சாஜன் கூறியுள்ள இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால் சாந்தகுமாரை விட்டுவிடுவதாக அவரது மனைவியிடம் கடத்தல் கும்பல் மிரட்டி உள்ளது. இதையடுத்து அவரது மனைவி மார்த்தாண்டம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். கடத்தல்காரர்கள் சொன்ன இடத்திற்கு சென்றபொழுது பணத்தை வாங்கி தப்பிக்க முயன்ற அந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தது கடத்தல்காரர்கள் பிடியில் இருந்த சாந்தகுமாரையும் மீட்டுள்ளனர்.