ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் இரும்புக் கதவை பெயர்ந்து விழுந்து சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நல்லூரில் வேலன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் தமிழிசை 3-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் தமிழிசை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது நுழைவுவாயில் இரும்பு கதவு திடீரென பெயர்ந்து தமிழிசை மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த தமிழிசையை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் இரும்பு கதவு பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டதால் அதிகாரிகளிடம் பலமுறை கதவை மாற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் எந்த பயனும் இல்லை. மேலும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே இக்கதவை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.