பாஜக எம்பிக்கள் எங்களின் இனிய எதிரிகள் என்பதால் சபாநாயகர் கவலைப்பட வேண்டாம் என்று மக்களவையில் TR பாலு தெரிவித்தார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படட போது காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். அதே போல இன்று மக்களவையில் இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டனர். பின்னர் இதன் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் TR.பாலு இந்த மசோதாவை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று ஏன்? விவாதித்த பின்னரே குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்றார்.
