சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.சார்க் நாடுகளின் மக்கள் ஒருவருடன் ஒருவர் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். நோயை கட்டுப்படுத்த தயாராக இருப்போம், ஆனால் அச்சமடைய தேவையில்லை.

கொரோனா வைரஸ் குறித்து குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம். கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போது கூட கணிக்கும் நிலை இல்லை என கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதில் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.