“மம்மின்னு சொல்லாதீங்க”…. அம்மான்னு சொன்னாதான் அலாதி மகிழ்ச்சி…. பெற்றோருக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்…!!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் பிரபல தெலுங்கு இசை அமைப்பாளர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் நூற்றாண்டு பிறந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது, தெலுங்கு சினிமாவில் 2 தலைமுறைகளை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு.

இவருடைய இசை மற்றும் பாடல்கள் காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும். நம்முடைய பாரம்பரியத்தை என்றைக்குமே மறக்கக்கூடாது. பாரம்பரியம் என்பது நம்முடைய வாழ்க்கை முறையை சார்ந்ததே தவிர அது மதம் இல்லை. அம்மா என்ற வார்த்தைக்கு ஆனந்தமே கிடையாது. அம்மா என்று அழைக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி எப்படிப்பட்ட உணர்வு கிடைக்கிறது. ஆனால் தற்போது நாம் நாகரிகம் என்று நினைத்து மம்மி என அழைக்கிறோம்.

முதலில் தாய்மொழி. அடுத்த சகோதரர் மொழி. அதன் பிறகு தான் வேற்று மொழி. எனவே நாகரீகம் என்ற பெயரில் நம்முடைய அடையாளத்தை மறந்து விடக்கூடாது. அதன் பிறகு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாய் மொழியை கற்றுக் கொடுத்து அதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். மேலும் அதிகாலையில் வரும் சூரிய உதயத்தை பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி கிடைக்கும் போது அதை பார்க்காமல் தற்போது யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் தான் நாம் மூழ்கி இருக்கிறோம் என்று கூறினார்.