காதல் வேண்டாம்…. ”எனக்கு வீடு தான் முக்கியம்” இளமதியில் திடீர் முடிவு…!!

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் ? என்று இன்னும் கண்டுபிடிக்காத நிலை ஏற்பட்டதையடுத்து பாராளுமன்றத்தில் தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் குரல் எழுப்பினார். இதனை தொடர்ந்து ட்வீட்டரில் #இளமதி_எங்கே என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகியது.

இந்நிலையில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கறிஞ்சர் சரவணனுடன் ஆஜராகிய இளமதி தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்துள்ளார். கொளத்தூர் மணி , காதலன் செல்வன் , திவிக நிர்வாகிகள் ஈஸ்வரன் , சரவணன் ஆகிய 4 பேர் மீது பவானி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *