அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி பேருந்துக்குள் ஏற முற்பட்டு இருக்கிறார். அப்போது பேருந்து டிரைவர் அவரை தடுத்து பெற்றோர்கள் பேருந்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார்.

ஆனாலும் ஹென்ட்ஸ் அவரை மீறி உள்ளே சென்று தனது மகன் மற்றும் மகளுடன் எட்டாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவனை தாக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் “அவனை அடிங்க, அவனை அடிங்க” என்று கத்திக் கொண்டே அந்த மாணவனை தாக்கினர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினர் வந்ததும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

அந்த தாக்குதலில் மாணவனுக்கு மூக்கு எலும்பு முறிந்தது. அதோடு இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை விசாரித்த போது சில தகவல்கள் வெளிவந்தது. அதில் அவர் இந்த 8ம் வகுப்பு மாணவன் தனது மகனை பல வாரங்களாக கேலி செய்து வந்ததாகவும், நேற்று கூட அவனை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார்.

மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனை விசாரித்த போது அவன் மெக்சிகன் வம்சாவளியை கொண்டவர் என்றும் ஹென்ட்ஸ் மகன்  தன்னை பார்த்து இனவெறி விளையாடல்கள் மற்றும் அவமதிக்கும் கருத்துக்களை கூறியதாகவும் அந்த மாணவன் தெரிவித்தான்.

தற்போது இது தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் அந்த பெண் மீது தாக்குதல், அச்சுறுத்தல் மற்றும் அனுமதியின்று புகுந்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவரது பிள்ளைகளுக்கும் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்த பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.