”சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது” உதயநிதி ஸ்டாலின் அறிக்கை…!!

சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது  என்று திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை  குறித்த அறிக்கையில் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு பக்க விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் , தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற இளைஞர் அணி உறுப்பினர் முகாமில் 17 வயது நிரம்பிய பள்ளி படிக்கும் தம்பி ஒருவர் என்னை இளைஞர் அணியில் சேர்த்தாலே போதும் என்று நம் நிர்வாகிகளுடன் விடாப்பிடியாக மல்லுக்கு நின்றான்.

நான் அவருடன் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன் இந்த சம்பவம் அடுத்த தலைமுறையை இளைஞர்களின் எழுச்சியை உள் வாங்கிக் கொள்வதாக அமைந்தது.அதிக உறுப்பினர்களை சேர்த்துவிட்டோம் என அடுத்தடுத்த நாட்களில் சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது மக்களையும், நட்டையும் காப்பாற்ற வேண்டிய இடத்தில் உள்ள நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் குறித்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்திருந்தார்.