“மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது” – பிரதமருக்கு பழனிச்சாமி கடிதம்…!!

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளிக்க கூடாது என தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா 9,000 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

Related image

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும்  காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  “மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது. கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய நீர் சக்தி அமைச்சகத்திடம் பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும். தமிழக அரசு உள்ளிட்ட காவிரி பாயும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.