“காணாமல் போன நாயின் அழுகுரல்!”.. எங்கிருந்து சத்தம் வருகிறது.. 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட ஆச்சர்ய சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு நாய் இரு சுவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் ஐந்து தினங்களுக்கு பின் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற நகரத்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் எங்கோ ஓடிவிட்டது. எனவே அதன் உரிமையாளர் பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார். இந்நிலையில் சுமார் ஐந்து நாட்கள் கழித்து வீட்டின் பக்கத்தில் நாய் அலறும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் எங்கு தேடியும், எந்த இடத்திலிருந்து நாயின் சத்தம் வருகிறது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் வீட்டின் சுற்றுப்புறங்களில் தேடியுள்ளார்கள். அப்போது அருகில் இருக்கும் பக்கத்து வீட்டின் கான்கிரீட் சுவர்களுக்கு நடுவில் நாய் மாட்டிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்பு பெரிய சுத்தியலை வைத்து துளை போட்டு நாயை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *