“எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட செல்லப்பிராணி “மனதை நெகிழ வைத்த பாசப்போராட்டம் !!!…

தஞ்சை மாவட்டத்தில் பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட நாயின் செயல் அப்பகுதி மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது

தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் என்பவர், இவர் கடந்த 4 ஆண்டுகளாக பப்பி என்ற ஒரு செல்லப் பிராணியை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் வயல்வெளியில் தனது பப்பியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென கரு நாகப்பாம்பு ஒன்று இடையில் வந்து சீறியது. அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பு நடராஜனை கடிக்க சீறிப்பாய்ந்தது, செய்வதறியாது திகைத்து நின்றார் நடராஜன். இதனைத் தொடர்ந்து தனது எஜமானை காப்பாற்ற பாம்பை நோக்கி சீறிப் பாய்ந்த நாய் பாம்பை கடித்து குதற தொடங்கியது .பாம்பு உயிரிழந்த பின்  தனது நாயை தூக்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களிடம் செல்லப்பிராணி செய்த செயலை சொல்லி மகிழ்ந்தார் அவர் கூறிக் கொண்டிருக்கும் அவ்வேளையில் பப்பி திடீரென மயங்கி விழுந்து உயிரை விட்டது .அப்போது பப்பியை தூக்கி பார்த்த நடராஜன் பப்பி பாம்பிடம் கடி வாங்கிருப்பதை கண்டார் பப்பி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *