“பணி நீட்டிப்பு செய்ய வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்கள்…. விருதுநகரில் பரபரப்பு….!!!

பணி நீட்டிப்பு செய்ய வேண்டி மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் அனைவருக்கும் பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கு 4 மாத ஊதிய நிலுவையும் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் டாக்டர் உதய பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைவருக்கும் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், 4 மாத கால ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *