”மருத்துவர்கள் ஸ்ட்ரைக்” நோயாளிகள் அவதி….!!

சென்னையில் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் , கலந்தாய்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் , பட்ட மேற்படிப்பு 50 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சென்னை MMC மருத்துவர்கள் 3 பேர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று ஸ்டான்லி ஓமந்தூரார் மருத்துவமனை , ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது டீன் தலைமையில் உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைபெற்றதால் போராட்டக்காரர்களுக்கும் , மருத்துவமனை நிர்வாகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் கூறும் போது எங்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் , அரசு உடனடியாக பேச்சுவாரத்தை நடத்த வேண்டுமென்று தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.