மலை ஏறும்போது வாந்தி வருதா? இனி கவலை வேண்டாம்..ஹெலிகாப்டரில் ஊட்டி போய்டலாம்!!

உதகையில் மிதவை உணவகங்கள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில் தாவரவியல் பூங்காவில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து உதகை வரை ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். சுற்றுலா பயணிகளின் ஆலோசனைக்கு பிறகு உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் உதகை மற்றும் பைபாரா படகு இல்லங்களில் மிதவை உணவகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply