ஒவ்வொரு வருடமும் (மார்ச் 14) ஆம் தேதி “பை தினம்” கொண்டாடப்படுவது எதற்காக தெரியுமா…? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 14ஆம் தேதி உலக பை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்னவென்றால் பையின் மதிப்பான 3.14 என்ற எண்ணை மார்ச் 14 என குறிப்பதுதான். பையின் தோராயமான பின்ன மதிப்பானது 22/7 என்பதால் அதைக் குறிக்கும் ஜூலை 22 ஆம் தேதியையும் கொண்டாட வேண்டுமல்லவா? இந்த தினத்தை பை அப்ராக்சிமேஷன் டே என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

1988 ஆம் வருடம் லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் பை தினத்தை கொண்டாடியது முதலில் இருந்து இந்த வழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. பை முக்கியமான எண்ணாக திகழ்வதாலும் அதனுடைய மதிப்பு 3.14 என வருவதாலும் மார்ச் 14 என்ற தேதி பையை குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மாணவர்கள் பையின் தசம இலக்கங்களை மனப்பாடமாக ஒப்பித்து பரிசுகளை வெல்வார்கள்.

பை வட்டத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால் வட்ட வடிவில் கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகள் இந்த நாளில் தயார் செய்து விழாவானது நிறைவு பெற்றதும் அதை உண்டு மகிழ்வார்கள். அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் இந்த தினத்தில் விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் பை என்ற முக்கிய எண் தோன்றுகிறது.

இயற்கையில் பெரும்பாலான பொருட்கள் வட்ட வடிவத்திலேயே உள்ளதால் இயற்கையோடு பை பின்ணி பிணைந்துள்ளது என்றும் கூறலாம். கோளம், கூம்பு, உருளை போன்ற கன வடிவங்களில் மேற்பரப்பு கொள்ளளவு மதிப்புகளில் பை காணப்படுகிறது. இதனால் பையின் மதிப்பு கோள்களின் சுழற்சி காலம் ஒரு ஊசலின் கால அளவு, அதிகபட்ச தரம் மதிப்பு, நிகழ்த்தகவுπππ மதிப்பு போன்ற எண்ணற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.