பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் தெரியுமா…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 2 பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலான அகநக மார்ச் 20-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. மேலும் இதனுடன் படக்குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply