“காஞ்சனா” இந்தி ரீமேக் “லட்சுமிபாய்” படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா ?

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் நடித்து இயக்க்கிய “காஞ்சனா 3” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ,  “லட்சுமிபாய்” என்ற இந்தி படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகியதும் ,

Related image

மேலும்  சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் மீண்டும் அந்த படத்தை அவர் இயக்க ஒப்புக்கொண்டதும் அனைவரும் அறிந்ததாகும் . இந்நிலையில் , இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி , இந்த படம் வரும்  2020 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது .

Image result for காஞ்சனா ரீமேக்

 மேலும் , சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார் .குறிப்பாக ,  இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது . இதுமட்டுமின்றி , இந்தப்படம் தமிழில் வெளியான காஞ்சனா முதல் பாகத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது .