அடேங்கப்பா…! ஆர்ஆர்ஆர் பட நடிகர் ஜூனியர் என்டிஆரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது.

அதன்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 571 கோடியாம். இவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா உள்ளது. அதன் பிறகு ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ள ஜூனியர் என்டிஆர் வெளிநாடுகளிலும் பல சொகுசு பங்களாக்களை வாங்கி போட்டு உள்ளாராம். மேலும் ஜூனியர் என்டிஆருக்கு மாத வருமானமாக 3 கோடி ரூபாய் இருப்பதாக கூறப்படுகிறது