உடல் நலம் குன்றிய நிலையிலிருந்த நம்ம கேப்டன் விஜயகாந்த்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா?

80-களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியின் தலைவராக திகழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பே எதிர்க்கட்சியாக இருந்து வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பெற்று வந்தார். எழுந்து நடக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் அவர்களை பலர் சந்திக்க முடியவில்லை என்றும் கூறி வந்தனர் என சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் தன் மகன் விஜயின் சினிமா வாழ்க்கையில் இந்த இடத்தை பெற மிக மிக முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் அவர்களை எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து பேசி உள்ளார் என தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. விஜயகாந்த் மற்றும் எஸ்.ஏ.சி இணைந்து எடுத்த புகைப்படமும் கையில் முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் என் உயிரை நான் சந்தித்தபோது என பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார் எஸ்.ஏ.சி. இதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் கேப்டன் விரைவில் குணமடைய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.