பில்கேட்ஸ் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குகிறார் தெரியுமா ?

உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் அவசியமான ஒரு விஷயம் என்னவென்றால் தூக்கம் தான். மூளை குறைந்த அளவில்  தடையில்லா மணிநேரம் தூங்குவது நல்லது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல சாதனைகள் புரிந்தவர்களின்,  தூக்கம் வரை அனைத்தும்  சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானதாக உள்ளது.

பில்கேட்ஸ்:

பில்கேட்ஸ்சை  தெரியாதவர்கள் உலகில் யாரும் இருக்கமுடியாது . உலக பணக்காரர்களின் பட்டிலில் இடம்பெற்ற மிகப்பெரிய தொழிலதிபர்.  1975ஆம் ஆண்டு தனது நண்பர் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை நிறுவினார். இதையடுத்து 2000-ஆம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

இவர் 12 மணி முதல் 7 மணி வரை என ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்குகிறார்.

பாரக் ஓபாமா:

பாரக் ஓபாமா அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி ஒரு உலக பிரபலமான அரசியல்வாதி அவர் அமெரிக்க வெள்ளை மாளிகை அலங்கரித்த முதல் கறுப்பின ஜனாதிபதி இவர்தான்.

ஒரு நாளைக்கு 1 மணி முதல் 7 மணி வரை என 6 மணி நேரம் தூங்குகிறார்.