இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் முதல் அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்த வகையில், முதல் அனுபவம் என்பது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி இனிதாகவும் துன்பமாகவும் அமைவது இயற்கையான நிதர்சனம்.இதே போலதான், முதல் தாம்பத்தியத்தின் போது உலகையும் மறந்து படுக்கையில் உச்சகட்டத்தை நெருங்க கணவன் மனைவி போராடுகின்றனர்.

இந்த முதல் தாம்பத்தியம் வாழ்நாளில் எத்தனை இன்பம் கிடைத்தாலும் தனது மனைவியுடன் கிடைத்த முதல் தாம்பத்யத்தை மறக்க முடியாது. முதல் தாம்பத்தியமானது ஒரு வித பயத்தையும், உடல் நடுக்கத்தையும், மிரட்டலையும் கண்டிப்பாக அனைவரிடத்திலும் ஏற்படுத்தும். இந்த நேரத்தில் பெண்கள் சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இது குறித்து நாம் சிலவற்றை காண்போம்.
தாம்பத்தியத்தை தொடங்கும் போது இருவரும் விருப்பத்துடன் துவங்க வேண்டும். இந்த சமயத்தில் தேவையில்லாமல் இருவரும் மன பதட்டங்கள் கூடவே கூடாது. கணவன் மனைவி இருவரும் தங்களின் விருப்பம் மற்றும் பிடிக்காத செயல்களை தயங்காமல் வெளிப்படையாக பேசி, உச்சக்கட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செயல்பட வேண்டும். தாம்பத்தியம் ஆரம்பிக்கும் முன்பு கண்டிப்பாக எடுத்தோம் கவுத்தோம்னு செய்யக்கூடாது. அதாவது காளை மாடு கம்பத்துல பாய்ந்தார் போல பாயாமல், மெதுவாக முன் மற்றும் புற விளையாட்டுகளில் துவங்கி புணர்ச்சியாக இன்பம் அடைய வேண்டும்.
தாம்பத்தியத்தில் முதல் முறையாக ஈடுபடும் சமயத்தில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. முதல் அனுபவத்திலேயே பல முறைகள் மற்றும் நீண்ட நேர உறவு என்ற பெயரில் மது அருந்தி புணர்ச்சியில் ஈடுபடுவது அல்லது மாத்திரைகள் பயன்படுத்துவது, ஆபாச படத்தை போல விதவிதமான அசாதாரண நிலையில் துணைக்கு துன்பத்தை ஏற்படுத்தும் புணர்ச்சியில் ஈடுபடுவது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
இயற்கையான முறையில் கணவன் மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும். எவ்வளவு நேரம் மற்றும் எவ்ளவு உச்சக்கட்டம் என்பது உங்களின் கையில் தான் இருக்கிறது. நீங்கள் முன் மற்றும் புற விளையாட்டுகளில் எப்படி செயல்படுகிறீர்களாளோ அதுவே நேரம் மற்றும் உச்ச கட்டத்தை தீர்மானிக்கிறது.
உங்களுக்கு ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம் இருந்தால் முதல் முறையான தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உங்களின் மனைவியிடம் அந்த படத்தில் எப்படி செய்தார்களோ அதே போல செய்ய வேண்டும் என்று கூறி உங்களின் செயல்பாடுகளை நீங்களே கீழ்த்தரமாக காட்டி, உங்களின் மனைவியையும் வீண் சித்திரவதைகளுக்கு ஆளாக்கிவிடாதீர்கள். முதலில் அவர்களுக்கு ஏற்படும் அனுபவமே அடுத்த இரவுக்கு உதவும்.
முதலிலேயே கொடூரனை போல் செயல்பட்டு, மீண்டும் உறவுக்கு அழைத்தால் இன்று இந்த கொடூரன் என்ன செய்ய போகிறானோ என்று ஒரு வித பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சளுக்கு ஆளாக்கி விடும். ஆகவே விருப்பத்துடனும் புரிதலுடனும், அன்புடனும் மனைவியிடம் செயல்பட்டு இன்பமுடன் வாழ வேண்டும்