நீங்கள் மது குடிப்பீர்களா…? ஒயினா இல்ல பியரா…? ரசிகரின் கேள்விக்கு கூலாக பதில் சொன்ன நடிகை சுருதிஹாசன்…!!!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். பாடகர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட ஸ்ருதிஹாசன் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழில் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான வீர சிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை சுருதி தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் மது குடித்தால் பியர், ஒயின், காக்டெயில் போன்றவற்றில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஸ்ருதிஹாசன் நான் கடந்த 6 வருடங்களாக மது குடிப்பதில்லை. நீங்கள் சொன்ன மது வகைகள் எதுவும் என்னுடைய விருப்ப பட்டியலில் கிடையாது. நான் எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் வேண்டுமானால் குடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் மது குடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் கூலாக பதில் அளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply